தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் தொடர்ந்து காதல், ஆக்ஷன் படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த பிரபாஸுக்கு முதல் முறையாக ராஜமௌலி சொன்ன கதைதான் பாகுபலி இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே பிரபாஸ் கடினமாக உழைக்க ஆரம்பித்தார் அதற்கு ஏற்ற பலனும் ஒருவழியாக படம் வெளிவந்து கிடைத்தது.
பாகுபலி திரைப்படம் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது உடனடியாக அதன் இரண்டாவது பாகத்தையும் இயக்குனர் ராஜமௌலி எடுத்து அசத்தினார் இரண்டாவது மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி அசத்தி தொடர்ந்து ராஜமௌலியும், பிரபாஸின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியது.
அதன்பின் நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் படங்களாக மாறின அதேசமயம் பிரமாண்ட பட்ஜெட் படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபாஸ் கையில் தற்போது ராதே ஷியாம், ஆதிபுருஸ், சாலர் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
முதலாவதாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் திரைப்படம் வெகு விரைவிலேயே திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஆக்ஷன், காதல் நிறைந்த திரைப்படமாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிரபாஸ் அப்போது அவரிடம் நீங்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறீர்களா கேட்டனர்.
அதற்கு எனது திரைப்படம் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் வெளியாகிறது. சம்பளம் பற்றி பேசினால் வரி பிரச்சனை வரும் என கூறினார். பாகுபலி மூன்றாவது பாகம் படம் வெளிவர வாய்ப்பு இருக்கிறதா என கேட்டுள்ளனர் அதற்கு பாகுபலி படங்கள் என் வாழ்நாளில் மறக்க முடியாத படங்கள் பாகுபலி 3 படத்தை எடுக்க இயக்குனர் ரெடியாக இருக்க வேண்டும் என கூறி உள்ளார்.