மீண்டும் பிரமாண்டமாக உருவாக இருக்கும் பாகுபலி வெப் சீரிஸ்.! ஆனால் நடிக்க மறுத்த நடிகை.!

bhakupali 1

பல கோடி பட்ஜெட்டில் உருவான சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும்.  அதோடு அந்த சீரியல் ரிலீஸ்சாகி சில வருடங்கள் ஆனாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் அந்த வகையில் ஒரு திரைப்படம் தான் பாகுபலி.

தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ்,  ரம்யா கிருஷ்ணன்,  அனுஷ்கா, தமன்னா,ராணா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ஒன்றிணைந்து நடித்திருந்தார்கள். அதோடு இத்திரைப்படம் சரித்திர கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது அந்த வகையில் பல கோடி பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதுவும் முக்கியமாக இத்திரைப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இவ்வாறு இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தமிழ்,தெலுங்கு,இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாகுபலி திரைப்படத்தின் கதையை அப்படியே வைத்துக் சீரியலை ரீமேக் செய்ய உள்ளார்கள்.

bhakupali
bhakupali

இந்த வகையில் இந்த சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த ராஜமாதா  சிவகாமி தேவி இந்தக் கேரக்டரின் இளம் வயது வாழ்க்கையை வைத்து இந்த வெப் சீரியலை தயாரிக்க முடிவு செய்துள்ளார்கள். அந்தவகையில் இளம்வயது ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் நடிப்பதற்காக நடிகை சமந்தாவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்கள்.

ஆனால் நடிகை சமந்தா இந்தத் தொடரில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.