நஸ்ரியாவிற்கு முன்பே பிரபல தமிழ் நடிகையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பகத் பாசில்.! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை..

nasriya

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில் நஸ்ரியாவை திருமணம் செய்துவதற்கு முன்பு வேறு ஒரு பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள ரூட் போட்டதாகவும் ஆனால் அந்த நடிகை துளிகூட கண்டுகொள்ளவில்லை எனவும் பல வருடங்கள் கழித்து தகவல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கையேத்தும் தூத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வில்லனாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் இவரின் சிறப்பான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது இதன் காரணமாக இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூப்பர் டிலக்ஸ்,புஷ்பா போன்ற படங்களிலும் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு சினிமாவில் கலக்கி வரும் இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட நிலைகள் இவர் நஸ்ரியாவுக்கு முன்னரே பிரபல தமிழ் நடிகை ஒருவரை விரும்பியதாக தகவல் வெளியாகிவுள்ளது. அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அன்னயும்,ரசூலும்.இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

anriya 1
anriya 1

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் பகத் பாசிலுக்கு ஆண்ட்ரியாவை மிகவும் பிடித்து விட்டதாம்.  ஆனால் அப்பொழுது பகத் பாசில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த காரணத்தினால் அவரை ஆண்ட்ரியா   தவிர்த்து வந்தாராம். அதன் பிறகு தான் பகத் பாசிலுக்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

anriya

இதனைத் தொடர்ந்து சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பகத்பாசில் தொடர்ந்து பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் ஆனால் ஆண்ட்ரியாவுக்கு தற்பொழுது பெரியதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.