பா. ரஞ்சித்துக்கு எதிரான படம் தான் பகாசூரன்.. சவால்விட்ட பிரபலம்.? மோகன் ஜி இல்லை

selvaragavan

கடந்த சில காலங்களாக இளம் இயக்குனர்கள் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளை அப்பட்டமாக படமாக எடுத்துக் காட்டுகின்றனர் அவர்களில் ஒருவர் இயக்குனர் மோகன் ஜி இவர் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து “திரௌபதி” எடுத்தார் இந்த வெளி வருவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

வெளிவந்த அதை பூர்த்தி செய்தது அதுமட்டுமில்லாமல் வசூலை வாரிக் குவித்தது. அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் ரிச்சர்ட் ரிஷியை வைத்து ருத்ரதாண்டவம் என்னும் படத்தையும் எடுத்தார். இவர் எடுத்த அந்த படமும் பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது இப்படி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து ஓடிய மோகன் ஜி, செல்வராகவனுடன் இப்போ கூட்டணி அமைத்து பகாசூரன் என்னும் படத்தை உருவாக்கியுள்ளார்.

இவர்களுடன் இணைந்து நட்டி நடராஜ், ராதாரவி, தயாரிப்பாளருக்கு கே. ராஜன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படமும் சமூகத்தில் நடக்கும் கெட்ட விஷயத்தை எடுத்துச் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது படத்தின் டிரைலர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்கின்ற நிலையில் பகாசூரன் படக்குழு சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர் மோகன் ஜி, தயாரிப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது பேசிய தயாரிப்பாளர் தேனப்பன் பகாசூரன் படத்திற்கு அனைவரது ஆதரவும் கிடைக்க வேண்டும்..

ஆம் இந்த படம் இயக்குனர் பா. ரஞ்சித்திற்கு எதிரான படம் தான்.. ரஞ்சித்திற்கு மட்டும் ஆதரவு கொடுக்கிறீர்கள் ஏன் அந்த ஆதரவை மோகன் ஜிக்கு கொடுக்க திருமணம் மறுக்கிறீர்கள் என்றார்.. இப்படி அவர் பேசியது சமூக வலைதள பக்கத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தேனப்பன் பேசியது தேவையில்லாத ஒன்று என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

selvaragavan
selvaragavan