அஜித், விஜய் ரேஞ்சுக்கு ஓவராக பில்டப் பண்ணும் பாபிசிம்ஹா.! உண்மையான சுயரூபத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்.!

babi
babi

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா இவர் முதன்முதலில் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு ஓரளவு பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக பீட்சா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நான் ராஜாவாகப் போகிறேன் சூது கவ்வும் ஜிகர்தண்டா, இஞ்சி இடுப்பழகி, மசாலா படம், உறுமீன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு அக்னி தேவி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் பாதியிலே சில பிரச்சனைகளை செய்து வெளியேறிவிட்டார் அதன்பிறகு படக்குழு கிராபிக்ஸ் மூலம் அவரின் கதாபாத்திரத்தை முடித்தார்கள் அதற்கு பாபிசிம்ஹா கேஸ் போட்டு படக்குழுவை இழுத்தடிக்க பார்த்தார் ஆனால் கடைசியில் பல்பு தான் வாங்கினார் பாபி சிம்ஹா.

bobby simha
bobby simha

ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக நடித்ததற்கு பாபி சிம்ஹா அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் தான் ஒரு சரித்திர நாயகன் என்ற ரேஞ்சுக்கு பில்டப் செய்து வருகிறார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது பாபிசிம்ஹா 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவார்அதேபோல் விடுதியில் உள்ள உணவுகளை மட்டும் தான் உண்ணுவார் என பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள்.

அதே போல் படப்பிடிப்பிற்கு காரில் வரும்போது ஆடி பென்ஸ் போன்ற விலை உயர்ந்த கார்களில் தான் வருவார் அதற்கு ஆகும் மொத்த செலவையும் தயாரிப்பு நிறுவனம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நடிப்பு இருந்தாலும் இவரின் ஆடம்பரமும் மற்றவர்களை மதிக்காத பண்பும் ஒரு நாள் இல்லைனாலும் ஒரு நாள் தரைக்கு இறங்கி விடுவார் என தயாரிப்பாளர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

இதனை பிரபல யூடியூப் வலைதளமான வலைபேசி நண்பர்கள் தங்களுடைய வீடியோ மூலம் கூறியுள்ளார்கள்.