டிஆர் ராஜேந்திரன் மூத்த பையனான சிலம்பரசன் சினிமாவில் பன்முக தன்மை கொண்ட கலைஞனாக விளங்குகிறார் ஏனெனில் அவர் இசையமைப்பாளராக சிறப்பு தோற்றங்களும் பாடலாசிரியர்களாகவும் விளங்கி வருகிறார் இவரை ரசிகர்கள் புனைபெயரில் கூப்பிடுகின்றனர் எஸ் டி ஆர் இதுவே சிம்புவின் மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது
முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிலம்பரசன் ஒரு சிறந்த நடிகராக தன்னை மெருகேற்றி வருகின்ற நிலையில் அவரது டாப் 10 படங்களை பின்வருவனவற்றில் குறிப்பிடப்படுகின்றன.
1. மன்மதன் படத்தை இயற்றிய நடிகரும் டைரக்டருமான சிம்புவுக்கு இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது தான் மன்மதன். இவரை இசையமைப்பாளராகவும் நடிகராகவும் பல படங்களில் நம்மால் காண முடியும் ஆனால் சிம்பு தன் முதல் டைரக்ஷன் படமான மன்மதன் படத்தை அவரே இயக்கிய வெற்றி படமாக காண்பித்துள்ளார். இப்படம் அவருக்கு ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. இப்படம் திரில்லர் மற்றும் காமெடி நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹீரோ தனது படத்தை அவரே இயக்கி அவரே நடித்தது மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள படம் இப்படம் என மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது இதுவே மிகப் பெரிய வெற்றியாகும்.
2. 2006 ஆம் ஆண்டு திரும்பவும் ஹிட் அடிக்க ஆசைப்பட்ட சிம்பு தனது புதிய பாணியான டைரக்டர் மட்டும் ஹீரோவாக நடிக்க முடிவு எடுத்தார் இப்படத்தை அவரே இயக்கி நடித்த இரண்டாவது படமாகும் இப்படத்தின் பெயர் வல்லவன்.படத்தில் கவர்ச்சியாக நயன்தாரா நடித்திருந்தாலும். இது ஒரு நல்ல படமாகவும் மக்கள் மத்தியில் கருதப்பட்டது அதுமட்டுமின்றி இது ஒரு வெற்றிப் படமாகவும் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது இப்படம். இப்படத்தில் சிம்பு தனது எதார்த்த நடிப்பை மெருகேற்றி உள்ளார் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய படம் இன்றும் மக்கள் பரவலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
3.2010 ஆம் ஆண்டு திரும்பும் கம் பேக் முனைப்பில் இறங்கிய சிம்பு இந்தமுறை வித்தியாசமான கதைக்களத்துடன் இறங்கினார்.விண்ணைத்தாண்டி வருவாயா இப்படத்தின் பெயர். இப்படம் அவருக்கு 25வது படமாக அமைந்தது. சிம்புவிற்கு ஒரு வித்தியாசமான படமாக அமைந்தது இது முழுக்க முழுக்க ஒரு காதல் படமாக எடுக்கப்பட்டது திரிஷா இந்த படத்தில் வித்தியாசமான ரோலை எடுத்து ஹீரோயினாக அற்புதமாக நடித்துள்ளார். இது மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது இதில் அவர் வித்தியாசமாகவும் நடித்திருந்தார்அது மட்டும் அல்லாது பில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார் மற்றும் நடிப்பில் இன்னும் சிறப்பாகவும் வெளிப்பட்டார்.
4. வானம் என்ற படத்தில் நடித்த சிம்பு பல விருதுகளையும் மற்றும் வித்தியாசமான கதை களத்தை ஏற்று நடித்திருந்தார். படம் காமெடி மற்றும் எமோஷனல் நிறைந்த படமாக வந்தது இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதில் அவர் தனது நடிப்பை மென்மேலும் சிறப்பாக நடித்து அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். சிம்பு மற்றும் சந்தானம் இவர்களது காமெடி இந்த படத்தில் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது அதுமட்டுமல்லாமல் சென்டிமென்ட் சீன்களும் பிரகாஷ்ராஜ் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார்.சிம்பு படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.
மேலும் அவரின் சிறந்த படைப்புகளான படத்தின் பெயர்கள் இதோ: போடா போடி, இது நம்ம ஆளு, செக்கச் சிவந்த வானம்,அச்சம் என்பது மடமையடா, சிலம்பாட்டம், கோவில் ஆகிய படங்கள் சிறந்த படங்களாக கருதப்படுகிறது.