Actor Bonda Mani: 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டு ஏராளமான திரைப் பிரபலங்கள் உயிரிழந்திருக்கின்றனர். அப்படி காமெடியினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகர் போண்டா மணியும் சமீபத்தில் உயிரிழந்தது தமிழ் ரசிகர்களை பெரிதளவிலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இரு தினங்களுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார் எனவே தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
போண்டாமணி இலங்கைத் தமிழரை சேர்ந்தவர் கோடீஸ்வரன் என்கின்ற போண்டாமணி பிழைப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு இயக்குனர் பாரதிராஜா இவரைக் கண்டு திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார். அப்படி பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். போண்டாமணி அன்றிலிருந்து சுமார் 32 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் மிகச் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தார். அப்படி இவர் மறைந்தாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த போண்டாமணியின் பெஸ்ட் ஐந்து படங்கள் குறித்து பார்க்கலாம்.
வாய்ப்புக்காக ரூமுக்கு அழைத்தார் அந்த இயக்குனர்.. உண்மையை போட்டு உடைத்த வித்யா பாலன்..
சுந்தரா டிராவல்ஸ்: வடிவேலு மற்றும் போண்டாமணி இணைந்து காமெடியில் கலக்கிய படம் தான் சுந்தரா டிராவல்ஸ். இதில் போண்டா மணி சிறிய கேரக்டரில் மணமகனாக தோன்றும் அந்த ஒரு சில காட்சிகள் ரசிகர்களை பெரிதளவிலும் மகிழ்வித்தது.
மருதமலை: மருதமலை படத்தில் ஒரு பிச்சைக்காரன் கையில் இவ்வளவு பணமா என வடிவேலு கூற பிறகு ஏட்டையா என்னிடமிருந்து எடுத்த பணத்தை திருப்பி கொடுங்க என்று போண்டா மணி பேசும் வசனங்களும் பெரிய அளவில் ஹிட்டடித்தது.
ABCD: இந்த இரண்டு படங்கள் போலவே போண்டாமணி வடிவேலு கூட்டணியில் வெளியாகி புகழ்பெற்ற படம் தான் ABCD. இதில் பாம்பாட்டியாக பேருந்துக்குள் போண்டா மணி வர பிறகு வடிவேலுக்கும் போண்டா மணிக்கும் இடையே நடக்கும் காமெடி காட்சி பாராட்டப்பட்டது.
வின்னர்: முழுக்க முழுக்க காமெடி கதைய அம்சத்துடன் உருவான வின்னர் படத்தில் போண்டாமணி வித்தியாசமாக நடித்திருப்பார். வடிவேலுவின் கைப்புள்ளை தோழர்களாக முத்துக்காளை மற்றும் போண்டாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
கண்ணும் கண்ணும்: போண்டா மணியின் மிக சிறந்த படமாக அமைந்த கண்ணும் கண்ணும் படத்தில் குளத்தில் இருந்து வெளியே வந்து வடிவேலுவை குழப்பி விட்டு தப்பி செல்வார் போண்டாமணி. இந்த காமெடி தற்பொழுது வரையிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.