பிரபல இயக்குனரின் கதையில் நடிப்பதாக சூர்யா உறுதி அளித்தார் ஆனால் எந்தவித தொடக்கமும் இல்லாத நிலையில் இயக்குனர் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அந்த கதையில் வேற ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு எடுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இயக்குனர் பாண்டிராஜ் பசங்க, நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் தற்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் திவ்யா துரைசாமி, தேவதர்ஷினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி இமான் இசை அமைத்துள்ளார். மேலும் இது திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் பத்தாம் தேதி பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் கூட வெளியானது. இந்த திரைப்படம் செல்லப்பா எழுதிய வாடிவாசல் ஒரு நாவலை மையமாக வைத்து இயக்கப்பட்ட இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு இடையில் வாடி வாசல் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் பாலா உடன் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
கன்னியாகுமரி, ராமேஸ்வரம் என ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பாலாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் கதை மீனவர்களை சார்ந்தது எனவும் கூறப்படுகிறது. வருகின்ற மார்ச் 18ஆம் தேதி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் பிரம்மாண்டமாக தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த இரண்டு படங்களுக்கும் முன்பே அஜித்தை வைத்து விசுவாசம் திரைப்படத்தை இயக்கிய சிவா உடன் சூர்யா இணைய இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சூர்யாவிடம் சிவா கதையை கூறி சம்மதம் வாங்கியதாகவும் ஆனால் சிவா பல வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சூர்யா சரி என்று சொல்லிவிட்டு சிவா படத்தில் நடிப்பது குறித்து எந்தவித முடிவும் செய்யாமல் சிவாவை கடுப்பேற்றி வருகிறார் என கூறப்படுகிறது இதனால் சிறுத்தை சிவா சூர்யாவுக்கு கூறிய கதையில் வேறொரு நடிகரை வைத்து இயக்கி விடலாம் என முடிவெடுத்துள்ளாராம் அப்படி இல்லை என்றால் தெலுங்கு பக்கமாவது சென்றுவிடலாம் என முடிவெடுத்துள்ளாராம்.