ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் போண்டாமணி இவர் சாமி காலமாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அவரது மருத்துவ செலவிற்கு தமிழக அரசு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் போண்டாமணிக்கு உதவி செய்தனர்.
இதனை அடுத்து சிகிச்சை பெற்று வந்த நடிகர் போண்டா மணி தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். தான் முன்பை விட தற்போது நலமாக உள்ளதாகவும் தனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்படி பேட்டியில் பேசிக் கொண்டிருக்கும் போது நடிகர் வடிவேலு பற்றியும் அது மட்டுமல்லாமல் அவர் மீது உள்ள தனது வருத்தத்தையும் சேர்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது அவருக்கு தனுஷ், விஜய் சேதுபதி, தமிழக அரசு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்ளிட்ட பலரும் தேவையான அளவு பணம் கொடுத்து உதவி செய்தனர் ஆனால் வடிவேல் உடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற போண்டாமணிக்கு வடிவேலு அவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று குற்ற உணர்ச்சியில் இருப்பதாக கூறியுள்ளார் போண்டா மணி.
போண்டாமணியும் வடிவேலும் பல திரைப்படங்களில் நகைச்சுவை காம்போவில் நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக அர்ஜுன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் பிச்சைக்காரனாக போண்டாமணியும் அவரிடம் பணத்தை புடுங்கும் போலீஸ்காரராக வடிவேலும் நடித்த காமெடி இன்று அளவிலும் பலருக்கும் பிடித்தது.
அந்த அளவிற்கு இருவரும் விட்டுக் கொடுக்காமல் நடித்திருந்தனர் ஆனால் நடிகர் வடிவேலு தன்னுடன் நடிச்ச சகா நடிகர் என்று கூட பார்க்காமல் அவர் ஆபத்தில் இருக்கும் போது கூட கை கொடுத்த தூக்கி விடாமல் இருந்தது தற்போது அவருக்கு ஒரு துன்பமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் இது பற்றி வடிவேலுவிடம் கேட்கும் போது போண்டா மணிக்கு நான் உதவாமல் வேற யாரும் உதவுவாய் என்று கூறியுள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இன்று வரையிலும் போண்டாமணிக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.