குக் வித் கோமாளி பிரபலத்திற்கு வாழ்த்துக் கூறிய பிகில் பட நடிகை.! என்ன நடக்குது இங்க

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பொதுவாக இவர்கள் எந்த நிகழ்ச்சி ஒலிபரப்பின் ஆனாலும் அதில் காமெடி மற்றும் சுவாரசியம் இரண்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

அந்த வகையில் ஒன்று தான் குக் வித் கோமாளி.  இந்நிகழ்ச்சி முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது இது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் காமெடி, ஆட்டம், பாட்டம் என்று பஞ்சம் இல்லாமல் இருப்பதால் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் சீசன் 2வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் தான் அஸ்வின்.  இவர் இதற்கு முன்பு துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஆதித்ய வர்மா மற்றும் ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு எதுவும் பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நான்கு திரைப் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.  இந்நிலையில் அஸ்வினுக்கு பிகில் பட நடிகையை ஒருவர் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

சமீபத்தில் அஸ்வின் தனது பிறந்த நாளை கொண்டாடினார் எனவே இவருக்கு பிகில் படத்தில் நடித்திருந்த ரேபா மோனிகா ஜான் தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் இவர் இதற்கு முன்பு அஸ்வினுடன் இணைந்து குட்டி பட்டாசு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார்.