தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1 நடிகையாக வலம் வரும் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அண்மையில்கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, சமந்தா, யோகிபாபு, திரிஷா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து முடித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ரொமான்டிக் படமாக உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. முதலில் இந்த திரைப்படம் OTT தளத்தில் தான் வெளியாக இருந்தது.
ஆனால் திடீரென முதலில் திரையரங்கில் வெளியிட்டு பின் OTT தளத்தில் வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் OTT டிஜிட்டல் உரிமையான இரண்டையும் ஹாட்ஸ்டார் நிறுவனமே கைப்பற்றி உள்ளது.
இதன்மூலம் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் 21 கோடியை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே இவ்வளவு கோடி பார்த்து உள்ளது நல்ல விஷயமாகவே கருதப்படுகிறது படம் வெளிவந்தால் இதைவிட இன்னும் பல கோடி அள்ளும் என படக்குழு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறார்கள்.