தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் கௌதம் மேனன் இவர் சிம்புவை வைத்து ஏகப்பட்ட திரைப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக பொறுமையாக சென்றாலும் கொஞ்சம் தத்ரூபமாக இருக்கும்.
அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சிம்புவை வைத்து அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வசூலை பெற்றது.
இந்நிலையில் அதே கூட்டணியில் நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான ஹிந்தி உரிமம் சுமார் 12 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இணையதளத்தில் வெளியிடுவதற்காக சுமார் இருபத்தி நான்கு கோடிக்கு கேட்டு வருகிறார்களாம். மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்கான 12 கோடிக்கு விலை போவதாகவும் இதுவரை 40 கோடி வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த திரைப்படம் உருவாக ஆன பட்ஜெட் வெறும் இருபத்தி எட்டு கோடி தான் இந்நிலையில் சிம்புவின் படம் இத்தனை கோடிக்கு விற்பனையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் தான்.
ஏனெனில் சிம்பு முன்பு போல் இல்லாமல் உடல் எடையை குறைத்துவிட்டு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறாராம் அந்த வகையில் பழைய கூட்டணியில் மீண்டும் இணைந்ததே ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது.