தளபதி விஜய் முதல் முறையாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தளபதிக்கு 66-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பிரபு, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த்..
மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை எதிர்த்து அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் இந்த பொங்கல் ஒரு திருவிழா போல இருக்குமென தெரிய வருகிறது. வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி இருக்கிறது.
இந்த படத்தில் தளபதி விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. படம் வெளி வருவதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அதற்குள்ளேயே ரசிகர்களை கவர்ந்திழுக்க படக்குழு அடுத்த அடுத்த அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர், ரஞ்சிதமே ரஞ்சிதமே ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று தீ தளபதி இரண்டாவது சிங்கிள் வெளியாகி..
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் வாரிசு வியாபாரம் குறித்து ஒரு தகவல் தெரிகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வாரிசு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமை செவன் ஸ்கிரீன் நிறுவனம் – 70 கோடி,
கேரளா தியேட்டர்கள் உரிமை 6.5 கோடி, கர்நாடகா தியேட்டர்கள் உரிமை 8 கோடி, வெளிநாடு தியேட்டர்கள் உரிமை 35 கோடி, ஹிந்தி டப்பிங் உரிமை 34 கோடி, அமேசான் டிஜிட்டல் உரிமை 75 கோடி, சன் டிவி சாட்டிலைட் உரிமை 57 கோடி, மொத்தத்தில் வாரிசு படத்தின் முழு வியாபாரம் மட்டுமே 295.50 கோடி படத்தின் பட்ஜெட் 260 கோடி. ரிலீசுக்கு முன்பாக 35. 50 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன