நடிகர் தனுஷ் திரை உலகில் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்து கொண்டு தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடுகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திருச்சிற்றம்பலம் படம் ஒரு கிளாஸான படமாக இருந்தாலும் அனைவருக்கும் ரொம்ப பிடித்து போன படமாக மாறியது. இந்த படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது.
செய்கிறார் அந்த வகையில் நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் இருக்கின்றன முதலாவதாக தனுஷின் நானே வருவேன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது இந்த படத்தை செல்வராகவன் அதாவது தனுஷின் அண்ணன் இயக்கி உள்ளார் தனுஷும், செல்வராகவனும் இணைந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான்.
அந்த வரிசையில் இந்த படமும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த படத்தின் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளிவந்து படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சும்மா மிரட்டி இருக்கிறார்.
இவருக்கு இணையாக இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாகவே நல்ல லாபம் பார்த்து உள்ளது நானே வருவேன் திரைப்படம் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
தற்பொழுது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை 25 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமையை 18 கோடிக்கு சன் டிவி வாங்கிவிட்டது. படம் வெளிவருவதற்கு முன்பாகவே போட்ட காசை பட குழு எடுத்துள்ளது.. இதனால் செல்வராகவனும், தனுஷும் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். இனி படம் வெளிவந்து ஒரு ரூபாய் காசை பார்த்தால் கூட அது படக்குழுவுக்கு லாபம் தான் என சொல்லப்படுகிறது.