“வலிமை” படத்தின் இன்டர்வெல் காட்சிக்கு முன்பாகவே ரசிகர்கள் அனைவரும் உறைந்து போய் தான் இருப்பார்கள்.! பேட்டியில் திலீப் சுப்பராயன் சொன்ன தகவல்.

valimai
valimai

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் சிறந்த படைப்புகளை கொடுத்து அசத்தி வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் ஹச். வினோத் சொல்லவே வேண்டாம் ஒவ்வொரு படத்தையும் பொறுமையாக எடுத்தாலும் சூப்பராக கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவரை தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை  ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தை வைத்து தற்பொழுது வலிமை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நேர்கொண்டபார்வை படத்திற்கு பின் அஜித்தை வைத்து பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து வலிமை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். வலிமை படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக போஸ்ட் பிரமோஷன் வேலைகளை மிக தீவிரமாக செய்து வருகிறது படக்குழு.

இருப்பினும் வலிமை படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்த வெளிவந்த வண்ணமே இருகின்றனே. ஒரு பக்கம் ஹச் . வினோத் மற்றும் பட குழுவில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் வலிமை படம் குறித்து சில அப்டேட்களை கொடுத்துக் கொண்டே வருகின்றனர் இப்படி இவை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அஜித் வெளியே சுற்றித் திரியும் புகைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிய இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஏன் சமீபத்தில் கூட தீபாவளி அன்று தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் இவர் எடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது இந்த நிலையில் வலிமை படத்தில் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் வலிமை படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியது: இந்த படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் உள்ளது இடைவெளியில் வரும் மாஸான காட்சி ஒன்று இருக்கிறது அது வரும் போது ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடுவதையும் தாண்டி ஒரு கட்டத்தில் அமைதியாகி விடுவார்கள் மேலும் இப்படி ஒரு காட்சியா என கூறி அனைவரும் வியந்து பார்ப்பார்கள் அந்த அளவிற்கு காட்சி இருக்கும் என அவர் கூறியுள்ளார்.