“டான்” படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடன் சொல்வதற்கு முன்பாக விஜய் போட்டுக் காட்டிய சிபி சக்கரவர்த்தி.! தளபதி சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா.? பகிர்ந்த இயக்குனர்.

don
don

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வசூல் நாயகனாக மாறி உள்ளார். திறமை இருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவார்கள் என்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒருவகையில் நாம் கூறலாம் சின்னத்திரையில் காமெடியாகனவும், தொகுப்பாளராக இருந்து பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக்கொண்டு தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துக் கூட ஒரு சில இளம் நடிகர்கள் உருவாக தொடங்கியுள்ளனர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது மேலும் இந்த திரைப்படம் 100 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்தது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக சி பி சக்கரவர்த்தியுடன் கைகொடுத்து “டான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தில் நடித்த நாயகி பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் எஸ் ஜே சூர்யா, சூரி, சமுத்திரகனி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி  சில தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். சிபி சக்கரவர்த்தியின் படத்தின் கதையை முதலில் சிவகார்த்திகேயனுடன் கூறினார். அவர் கதையை முழுவதும் கேட்டுவிட்டு நிராகரித்துள்ளார் ஆனால் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்துதான் இந்த படத்தை பண்ண வேண்டும் என்பதற்காக படத்தில் 25 வெர்ஷனிஸ் கதையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கதையை கூறியுள்ளார்.

ஒரு வழியில் சிவகார்த்திகேயனுக்கு அது பிடித்துப் போக இந்த கூட்டணி இணைந்ததாக அவரே தெரிவித்தார் மேலும் மெர்சல் திரைப்படத்தில் அட்லியின் துணை இயக்குனராக இருந்த பொழுது இந்த படத்தின் கதையை நான் அப்பொழுதே குறும்படமாக ரெடி செய்து விட்டேன் ஒரு நாள் தளபதி விஜய் இடம் நான் காண்பித்தேன் அதை பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக இருப்பதாக கூறி என்னை பாராட்டியது எனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என அவர் தெரிவித்தார்.