தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் சூர்யா நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவரும் சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நிலையில் மீண்டும் அவர் எப்பொழுது வெற்றி திரைப்படத்தின் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது அந்த வகையில் அவர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் சூரரைப்போற்று.
இத்திரைப்படத்தினை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார் மேலும் இதற்காக தேசிய விருதையும் பெற்றார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்தியிலும் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சூரரைப்பொற்று இந்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் சுதாக கொங்கரா சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது குறித்து அவ்வப்போது தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளன. அதாவது சூர்யாவின் அடுத்த திரைப்படத்தினை வெற்றிமாறன் சிறுத்தை சிவா ஞானவேல் ஆகியோர்கள் இயக்கத்தில் நடிக்க இதற்கு முன்பு கமிட்டாகியுள்ளார் அடுத்ததாக சூர்யா படத்தை இயக்குவதற்கு முன்னே கீர்த்தி சுரேஷ் வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தை இயக்க திட்டம் போட்டுள்ளதாக சுதா கொங்கரா பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்க இருக்கும் இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை அம்சம் உள்ள திரைப்படமாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பார் எனவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
எனவே சூர்யா படத்திற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தினை சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்படும் தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, ஹிந்தி என ஏராளமான திரைப்படங்களில் மாறி மாறி நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.