தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சீனிவாசன் இவரை அனைவரும் பவர் ஸ்டார் என செல்லமாக அழைப்பார்கள் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோவாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த பவர் ஸ்டார்.
அதன்பிறகு கோலிசோடா, கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப்புறா திரைப்படங்களின் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருந்தார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடைசியாக நடித்த திரைப்படம் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி என்ற திரைப்படம் ஆகும்.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பவர் ஸ்டார் ஹீரோவாக நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை வனிதா விஜயகுமார் நடித்திருப்பது மட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தின் புகைப்படங்கள் பல இணையத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சை உருவாகி விட்டது.
இந்நிலையில் பவர்ஸ்டார் பண ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார் அப்போது அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக 7 முதல் 8 பிசினஸ் செய்து கொண்டிருந்தால் அதில் 150 பேருக்கு வேலை கொடுப்பது மட்டுமில்லாமல் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்துக் கொண்டிருந்தார் அந்த வகையில் இவரை பலரும் டாக்டர் சீனிவாசன் என்று தான் அழைப்பார்கள்.
இதனை தொடர்ந்து அவரிடம் சினிமா துறை சார்ந்த பெண் ஒருவர் வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டு இருந்தார். அப்பொழுது நானும் சரி என்று அவர்களைப் பார்க்க சென்றேன் அப்பொழுது 100 பேருக்கு மேலாக தினமும் நடித்து அவர்களுக்கு கூலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த வகையில் ஒரு சில பேருக்கு மட்டும் சம்பளம் கொடுப்பார்கள் ஒரு சில பேரை அனுப்பி வைத்துவிடுவார்கள். பின்னர் தான் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற காரணத்தினால் தானே திரைப்படம் இயக்கி நடிக்க ஆரம்பித்தேன் ஏனெனில் ஏற்கனவே 150 பேருக்கு சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் இன்னும் ஒரு நூறு பேருக்கு சம்பளம் கொடுத்தால் நல்லதுதான் என்ற காரணத்தினால் தான் சினிமாவில் இறங்கினேன். என போயர் ஸ்டார் கூறியுள்ளார்.