நடிகர் சூர்யா சிறந்த மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது பாணி ஆம் இதுவரை அவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்களும் அப்படித்தான் இருந்துள்ளன வருகின்ற திரைப்படங்களும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைப் பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா எதற்கும் துணிந்தவன் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களை தற்போது தேர்வு செய்து வைத்துள்ளார் நடிகர் சூர்யா இதனால் அவரது வெற்றிப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சிங்கம் முதல் படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகியது சிங்கம் 3 பாகங்கள் வெளியாகி மக்களை கவர்ந்தது.
இந்த நிலையில் முதன் முதலில் சிங்கம் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை தான்நடிக்க வைக்க இயக்குனர் ஹரி முடிவு செய்தாராம். அந்த பிரபலம் வேறுயாருமல்ல தளபதி விஜய் தான் முதலில் நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்பொழுது அவர் சில காரணங்களால் சிங்கம் படத்தில் நடிக்க முடியாமல் போனது உடனே படக்குழு அந்த படத்தில் நடிகர் சூர்யாவை நடிக்க வைத்து அழகு பார்த்து உள்ளது. எது எப்படியோ சிங்கம் 1, 2, 3 ஆகிய பாகங்கள் அனைத்துமே வெற்றி பெற்று சூர்யா கேரியரில் ஒரு பெஸ்ட் திரைப்படமாக அமைந்ததாம்.