“சார்பட்டா பரம்பரை” படத்தில் கமீட் ஆவதற்கு முன்பு பா . ரஞ்சித்திடம் பல முறை மன்னிப்பு கேட்ட நடிகை.! அவரே சொன்ன சூப்பர் செய்தி.

sanjana-nadarajan
sanjana-nadarajan

சினிமா திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகைகள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் கிராமத்து சாயலில் நடித்து பின் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முன்னேறி டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றிய பிறகு அதிலிருந்து மாறி ஆக்சன் மற்றும் காதல் படங்களில் நடிக்கின்றனர்.

அதை சரியாக புரிந்து கொண்ட இளம் நடிகைகள் பலரும் முதலில் கிராமத்து சாயலில் இருக்கும் கதைகளில் நடிக்க விரும்புகின்றனர் அந்த வகையில் வந்த நடிகைகளில் ஒருவர்தான் சஞ்சனா நடராஜன்.

தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் தனுஷின் மனைவியாக நடித்து இருந்தார் அதை தொடர்ந்து இவருக்கு சார்பட்டா பரம்பரை படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதிலும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி பின்னி பெடல் எடுத்தார் சார் பரம்பரை படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பட்டா பரம்பரை படத்தில்  இவர் தேர்வான விதத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சஞ்சன நடராஜன் கூறியது  : எனக்கு 17 முறை ஒரு போன் கால் அடித்தது நான் யாரோ என்னை காலாய் கின்றனர் என்று நினைத்து விட்டேன் ஆனால் பின் யார் கால் பண்ணுகிறார்கள் என்று தேட ஆரம்பித்தேன் ஒரு வழியாக கண்டுபிடித்து பார்த்தால் அது பா ரஞ்சித் ஆபிசிஸ்ல் இருந்து வந்ததாக தெரிய வந்தது.

உடனே அந்த நம்பருக்கு கால் செய்தேன் போன் எடுத்தார்கள் பின் நான் மன்னிப்பு கேட்டு விட்டு அவரது  ஆபீஸ்க்கு சென்றேன் நிதானமாக வரவழைத்து பின் படத்தின் கதையை சொல்ல கமீட்டாகி இந்த திரைப்படத்தில் நடித்தேன் என தெரிவித்தார்.