தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் சமீபகாலமாக பாலிவுட்டில் கால் தடம் பதித்து ஹாலிவுட் முதல் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தார்கள், இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பது கொண்டாட்டமாக இருந்தாலும் முதல் பாகத்தில் நடித்த கார்த்தி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இல்லாதது படத்திற்கு மைனஸ் தான் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவித்துள்ளார் செல்வராகவன் அதற்கு முன்பே கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக இருக்கிறார் செல்வராகவன். இதனை செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் செல்வராகவன் மீண்டும் சினிமாவில் படத்தை இயக்க ஆரம்பித்ததால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மானிட்டரில் ஜீப் ஒன்று நிற்பதைப் போலவும் அதை செல்வராகவன் கவனித்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதைப் பார்க்கும் பொழுது செல்வராகவன் இயக்கும் அடுத்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என கூறுகிறார்கள், செல்வராகவன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் அந்த வகையில் செல்வராகவன் தனுஷ் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சகட்டமாக இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து முதன் முறையாக ஆக்ஷன் அவதாரத்தில் இணைய இருக்கிறார்ககள் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.