தென்னிந்திய சினிமாவில் வளரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற திரைப்படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். முகமூடி திரைப்படம் ரசிகர்களிடம் பிரபலமானதொ இல்லையோ ஆனால் அதில் நடித்த பூஜா ஹெக்டே ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டார்.
ஆனால் இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே 2010ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2-வது இடத்தை தட்டிச் சென்றவர். தமிழில் நடித்த திரைப்படம் ஓரளவுதான் இவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது பிரபலம் அடையும் அளவிற்கு இவருக்கு முகமூடி திரைப்படம் கைகொடுக்கவில்லை அதனைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் நடித்து வந்தார். தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் சமீபத்தில் கூட அல்லு அர்ஜுனன் அவர்களுடன் அளவைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த படத்தில் புட்ட பொம்மா புட்ட பொம்மா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடல் தெலுங்கு தேசத்தை தாண்டி தமிழ் ஹிந்தி என பல இடங்களிலும் ஹிட்டடித்தது.
இந்த நிலையில் தற்போது பூஜா ஹெக்டே தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது பிஸ்ட் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகள் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது அதன்பிறகு சென்னையில் பாடல் காட்சியை படக்குழு முடித்தார்கள்.
இந்த நிலையில் ஒரு சண்டைக் காட்சிக்காக படக்குழு மொத்தமும் ரஷ்யா செல்ல இருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விஜயுடன் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த சமயத்தில் பூஜா ஹெக்டே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களை வளைத்துப் போட்டு வருகிறார்.
அந்தவகையில் பூஜா ஹெக்டே பெரிய மீசை வைத்ததுபோல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.