சிங்கம் படத்தில் நடித்ததால் ஒரே அசிங்கமா போச்சு.. இப்ப வரையும் அழுது தீர்க்கும் நடிகை.! கேவலமான வேலை பார்த்த ஹரி.

hari-
hari-

இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில்  அதிக ஆக்சன் திரைப்படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனர் ஹரி ஆறு, ஐயா, வேங்கை, சிங்கம், சாமி, யானை போன்ற பல படங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக யானை திரைப்படம் சில தினங்களுக்கு முன் தான் திரையரங்கில் வெளியானது இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்த படம்.

யானை படத்தில் அருண் விஜய் உடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நல்ல வசூல் வேட்டை அள்ளி வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி சூர்யாவை வைத்து அருவா திரைப்படத்தை இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் சிங்கம் படத்தில் நடித்த வனஜா பேட்டி ஒன்றில் சில தகவல்களை குறிப்பிட்டார் நடிகை வனஜா தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களிலும் மற்றும் சின்னத்திரையில் அதிக சீரியல்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிங்கம் படத்தில் நடித்தது குறித்து பேசியது சிங்கம் படத்தில் என்னை நடிக்க வைக்க ஹரி சார் அழைத்தார்.

ஆனால் படத்தின் கதை என்னவென்று எனக்கு சொல்லவில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் நீங்கள் பான்பராக் போட்டு நடிக்க வேண்டும் என கூறினார் ஆனால் நான் அப்பொழுது நடிக்க மாட்டேன் என கூறினேன். ஒரு வழியாக என்னை சமாதானப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தனர் படம் வெளிவந்து அனைவரும் என்னை திட்டி தீர்த்தனர்.

vanaja
vanaja

என்னடா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விட்டோமே என நானும் சற்று வருத்தப்பட்டேன் என கூறினார் மேலும் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் எனது கணவர் ஆனால் அப்பொழுது அவரை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் அப்பொழுது முதல் காட்சியில் பான்பிராக் போட்டு நடித்ததற்காக அவருக்கும் எனக்கும் சற்று வாக்குவாதம் எல்லாம் நடந்தது.