ரஜினி,கமலுக்கு அடுத்தாக இருந்த விக்ரம், இந்த படங்களால் தான் அவரது மார்கேட்டை இழந்தார்.! விவரம் இதோ!!

vikram
vikram

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விக்ரம். இவர் 1900ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சேது,ஜெமினி, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள் போன்ற சிறந்த படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.

சினிமாவில் சிவாஜிக்கு அடுத்ததாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர்கள் ஒரு  சிலரே. அந்த வகையில் கமலுக்கு அடுத்தபடியாக வருபவர் நடிகர் விக்ரம். இவர் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது திறமையை வெளிக்காட்டி வருபவர். அதுபோன்று பல படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அதில் சில தெய்வத்திருமகள், அந்நியன், ஐ போன்ற படங்களாகும்

vikram
vikram

விக்ரம் அவர்கள் ஜெமினி, தூள், சாமி, அந்நியன் போன்ற தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த நிலையில் ரஜினியை வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த படங்களான பீமா,மஜா போன்ற படங்கள் மூலம் பெரும் பின்னடைவை சந்தித்தார்.இவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் கமலுக்கு ஈடு இணையாக இருந்திருப்பார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.