லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக ஓடி கொண்டு இருக்கிறார் இவர் இதுவரை டாப் ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடித்து வருவதால் இவரது மார்க்கெட் கீழே இறங்காமல் அப்படியே இருக்கிறது. சினிமா மட்டுமே வாழ்க்கை என இருந்த இவர் நானும் ரவுடிதான்.
திரைப்படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார் அதன் பிறகு இந்த ஜோடி கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்தனர் ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி திரை பிரபலங்கள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரது முன்னிலையிலும் ஜோராக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இந்த ஜோடி சினிமாவுக்கு என ஒரு நேரத்தை ஒதுக்கி.
வைத்து விட்டு மீதி நேரங்களில் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கின்றனர் அதனால் இந்த ஜோடி தற்பொழுது செம சந்தோஷத்தில் இருந்து வருகிறது அண்மையில் கூட ஸ்பெயின் நாட்டிற்கு போய் வந்தது அந்த புகைப்படங்கள் வேற லெவலில் வைரல் ஆகின இப்படி இருந்தாலும் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது அதனால் இப்பொழுது குழந்தை பெற்றுக் கொண்டால் நல்லது என முடிவெடுத்திருக்கிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாராவை பரிசோதித்த டாக்டர்கள் சொல்லி உள்ளது என்னவென்றால் ஒன்பது மாதங்கள் மருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென நயன்தாராவிடம் கூறினார்களாம்.
குழந்தையை பெற்றுக் கொள்ள அவரும் ஆர்வமாக இருப்பதால் சினிமாவிலிருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது இதனை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த செய்தி தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.