Actor motta Rajendiran current status:ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் மொட்ட ராஜேந்திரன். இவர் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி இருப்பார். மேலும் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.இந்நிலையில் வில்லனாக நடித்து வந்த மொட்டை ராஜேந்திரன் தற்பொழுது காமெடியனாக நடித்து கலக்கி வருகிறார்.
முன்னர் உள்ள காமெடி நடிகர்களை ஓரம் கட்டும் வகையில் தற்பொழுது இவர் விளங்குகிறார். இவர் பானா காத்தாடி, உத்தமபுத்திரன், கந்தக் கோட்டை போன்ற படங்களில் இளம் நடிகர்களுடன் நடித்து வந்தார். அதன் பிறகே முன்னணி நடிகர்களுடன் இணைந்தார். இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜாராணி, திருடன் போலீஸ், டார்லிங், நானும் ரவுடிதான், வேதாளம், தெறி போன்ற திரைப்படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.
தற்பொழுது அவர் எதிர் பார்க்கும் அளவிற்கு வில்லனாக நடிக்க படங்கள் வாயிப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் காமெடி நடிகராக நடித்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வி அடைந்தது. தற்பொழுது இவர் பேசும் காமெடிகளில் டபுள் மீனிங் உடன் பேசுவதால் தமிழ் சினிமாக்களில் கிசுகிசு உருவாகியுள்ளது.