நான் படிக்காதவன் என்ற காரணத்தினால் நான் கூறும் கருத்துகள் அனைத்துமே சர்ச்சையில் முடிந்து விடுகிறது..! மனம் நொந்த சூரி..!

soori
soori

சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் சூர்யா, சங்கர், சூரி, யுவன் சங்கர் ராஜா போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த விழாவில் நடிகர் சூரி அவர்கள் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைகள் முடிந்துள்ளது.

அந்த வகையில் சூரி அவர்கள் சூர்யா குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளையே புகழ்ந்து பேசும் வகையில் ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று கூறுவது மட்டுமில்லாமல் அவை பல ஜென்மம் பேசும் என நடிகர் சூரி அவர்கள் பேசிய நிலையில் இவை பல்வேறு சர்ச்சையை உருவாக்கியது மட்டும் இல்லாமல் பல இந்து அமைப்பினார்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் சிலர் ஏன் கோயில்களை மட்டும் பற்றி பேசுகிறீர்கள் மசூதி, சார்ஜ் போன்றவற்றைப்பற்றி பேச உங்களுக்கு தைரியம் கிடையாதா என பலர் கேள்வி எழுப்பிய நிலையில் இப்பொழுது யாரும் கோயில் கட்டியது கிடையாது இவை அனைத்துமே அரசர்கள் அன்று கட்டிய கோவில்கள் தான் அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கோயில்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் தான் என கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான்  ஜோதிகா அவர்கள் இது போன்ற கருத்துக்களை கூறி பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்ட தற்போது அதே மாதிரி சர்ச்சையில் சிக்கிய சூரியை கண்டித்து பயில்வான் ரங்கநாதன்  தற்பொழுது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் இந்து கோயில்கள்  மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் இணைத்து பேசிய சூரி ஏன் கிறிஸ்தவர்களின் சர்ச் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதி போன்றவற்றை பற்றி பேசவில்லை.

இவ்வாறு கேள்வி எழுப்பியது மட்டும் இல்லாமல் என்று அவர் ஹோட்டல் வைத்து நடத்தி வந்தாலும் இவர் ஒரு நேரத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமில்லாமல் இவரும் ஒரு இந்துதான் அந்த வகையில் ஒரு இந்து மதத்தை தவறாக பேசுவது  சரி இல்லை என பயில்வான் கூறியுள்ளார்.

தொடர்ந்து இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சூரி அவர்கள் விருமன் பிரமோஷன் விழாவில்  இசை வெளியீட்டு விழாவின்போது நான் கோயில் கட்டுவதை விட ஏழைகளுக்கு கல்வி கொடுப்பது நல்ல விஷயம் என்று கூறியது தவறாக பலரும் புரிந்து கொண்டார்கள் அது மட்டும் இல்லாமல்  மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தர். இப்படி இருக்கும் நிலையில் நான் இந்து மதத்திற்கு ஏன் எதிராக நிற்க போகிறேன்.

அதுமட்டுமில்லாமல் நான் படிக்காதவன் என்பது தான் காரணமாக நான் பேசும் கருத்துக்கள் பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது இதனால் மனம் நொந்து போகிறேன். அதுமட்டுமில்லாமல் எல்லோரும் நல்லா படிக்கணும் என்று நான் இதை சொல்லவில்லை அன்று மகாகவி பாரதியார் சொன்னதை தான் நான் தற்போது கூறியுள்ளேன் ஆனால் நீங்கள் அதனை தவறாக புரிந்து கொண்டீர்கள் என கூறியுள்ளார்.