வயசு ஏற ஏற கூடிக்கொண்டேபோகும் நயன்தாராவின் அழகு.. பியூட்டி டிப்ஸ்

nayanthara

நடிகைகள் என்னதான் திறமை சூப்பராக வெளிப்படுத்தி இருந்தாலும் அழகு இருக்கும் வரை தான் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கும்.. அதை நன்கு உணர்ந்து கொண்டவர் நயன்தாரா. தற்பொழுது அவருக்கு 35 வயது மேல் ஆனாலும் அவருடைய அழகும் பொலிவும் குறையாமல் இருப்பதால்..

இன்று வரையிலும் அவர் தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து முன்னணி நடிகரின் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்பொழுது கூட கை வாசம் ஜவான், டெஸ்ட், நயன்தாரா 75, இறைவன் என பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி வெற்றி நடிகையாக ஓடும் இவர் மறுபக்கம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் இருக்கின்றனர் தற்பொழுது வயது அதிகமான ஆனாலும் அவருடைய அழகும் பொலிவும் இன்றுவரை குறையாததால் இன்னும் சில வருடங்கள் அவர் முன்னணி நடிகையாக ஜொலிப்பார் என பலரும் கூறுகின்றனர் இந்த நிலையில் அவருடைய அழகுக்கான காரணம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது நயன்தாரா எப்பொழுதும் போலியுடன் இருக்க தினமும் ஒர்க் அவுட், யோகா செய்வதை அன்றாட கடமையாக வைத்திருக்கிறாராம். குறிப்பாக யோகா தான் அவரது உடல் அழகை வடிவாக கொண்டு வந்ததாம் இவர் அதிகம் தர்பூசணி ஜூஸ் குடிப்பாரம் மேலும் வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, தேன், அவகாடா உள்ளிட பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கிறாராம்..

nayanthara
nayanthara

மேலும் தினமும் வொர்க் அவுட் முடிந்தவுடன் இயற்கை பானம் இளநீர் குடிப்பதை தவறாமல் வைத்திருக்கிறார் அத்துடன் காலை உணவில் கண்டிப்பாக ஸ்மூத்தி இருக்குமாம் இது உடல் எடையை குறைக்கவும் எனர்ஜியை கூட்டவும் உதவுகிறது. இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.