சினிமா உலகில் அழகாக இருந்ததால்தான் நீண்ட தூரம் பயணிக்க முடியும் ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்ற ஒரு கருத்து இருந்தது ஆனால் அதை எல்லாம் உடைத்து எறிந்து காட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது அழகான ஸ்டைல் மற்றும் திறமையின் மூலம் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார் .
மேலும் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி 40 ஆண்டுகளாக சினிமா உலகில் ஓடிக் கொண்டிருக்கிறார் ஏன் இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்துகிறார். ரஜினி இப்பொழுது தனது 169 ஆவது திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன் , சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தை இயக்க போகிறார். இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடனும் கைகோர்க்க இருக்கிறார். ரஜினியை போலவே கருப்பாக இருந்தாலும்..
தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து வெள்ளித்திரையில் பல வெற்றிகளை குவித்தவர் நடிகை சரிதா இவர் பாக்யராஜ் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர். இவர் இதுவரை தண்ணீர் தண்ணீர், வண்டிச்சக்கரம், ஊமை விழிகள் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பாக இருந்து தமிழ் சினிமா உலகில் பல வெற்றிகளைக் கண்ட நடிகர் நடிகைகளில் ஒருவர் சரிதா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். கருப்பாக இருக்கும் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கும் நடிகைகளுக்கு முன்னோடியாக சரிதா திகழ்கிறார்.