விஜய் டிவி பிரியங்கா அவரது அப்பாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம்.!

priyanka-
priyanka-

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா. சரவணன் மீனாட்சி போன்ற ஒரு சில சீரியல்களில் நடித்து பின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் வலம்வந்தார். பிரியங்காவின் பேச்சு கொஞ்சம் காமெடி கலந்து மக்களை என்டர்டைன்மென்ட் செய்வதுபோல் அமைந்ததால் பின்பு அதே விஜய் தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்யத் தொடங்கினார்.

அப்படி சூப்பர் சிங்கர் என்ற பிரபல நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து சீசன் சீசன் ஆக பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பலரும் பிரியங்காவிற்காகவே பார்ப்பார்கள் அந்த அளவிற்கு பிரியங்காவின் காமெடி கலாட்டா மக்கள் பலரையும் என்டர்டெயின்மென்ட் செய்தது.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் ஷோவை பிரியங்கா சோலோவாக  தொகுத்து வழங்கி வந்தார். பின்பு ஒரு கட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த பிக் பாஸ் ஒவ்வொரு சீசனிலும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டாலும் விஜய் டிவி பிரபலங்களும் சிலர் கலந்து கொள்வார்கள் அப்படி கடந்த ஐந்தாவது சீசனில் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு கட்டத்தில் அவரது அப்பாவை பற்றி மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார்.

எனது அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நான் சின்ன வயதிலேயே அவர் இறந்துவிட்டார் என வருத்தத்துடன் கூறினார். இந்தநிலையில் பிரியங்கா தனது இளம் வயதில் அவரது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.

priyanka and dad
priyanka and dad