இந்தியாவிலேயே முதன்முறையாக பீஸ்ட் டிரைலருக்கு தான்..! வெறித்தனமான அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம்.! ரெடியா நண்பா சும்மா தெறிக்க போகுது

beast movie trailer
beast movie trailer

தளபதி நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையமைப்பில் சமீபத்தில் வெளியாகிய அரபி குத்து மற்றும் ஜாலியா ஜிம்கானா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறது படக்குழு அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக சன் பிக்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் ட்ரெய்லர் முன்னேற்றமாக 17 நிமிட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது படக்குழு.

இப்படி இருக்கும் நிலையில் சற்று முன் சன் பிக்சர் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளமான ட்விட்டரில் beast படத்தின் டிரைலர் பிரீமியர் லார்ஜ் ஃபார்மேட் என்ற டெக்னாலஜி முறையில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் முதன் முறையாக இந்த நவீன டெக்னாலஜியை ஒரு படத்தின் டிரைலருக்கு பயன்படுத்தி வெளியாகி உள்ளது.

அப்படி என்ன இருக்கிறது என்பதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரீமியர் லார்ஜ் ஃபார்மேட் என்பது முழுமையான ஸ்கிரீன்  மற்றும் நவீன டெக்னாலஜி அமைந்த சவுண்ட் எஃபெக்ட்  கிட்டத்தட்ட i-max மாதிரி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த புதுமையான அனுபவத்தை ரசிப்பதற்காக ரசிகர்கள் தயாராகி விட்டார்கள்.

விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலருக்கு இப்படி ஒரு புதுவிதமான டெக்னாலேஜ்யை பயன்படுத்துவதால் ட்ரைலர் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.