வழக்கம்போல் தளபதி சொன்ன குட்டி ஸ்டோரி.! சமூக வளைதளத்தில் அடித்துக்கொள்ளும் அஜித் விஜய் ரசிகர்கள்.! அப்படி என்ன ஸ்டோரியா இருக்கும்.

தளபதி விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது வழக்கமாக விஜய் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதற்கு முன் இசை வெளியீட்டு விழா நடக்கும் ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா நடத்த முடியாமல் போனது.

அதற்கு காரணம் கொரோனா அச்சுருத்தல் தான் அதேபோல் தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி ஸ்டோரி கூறி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். அதேபோல் விஜய்யின் பேச்சை கேட்கவும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா திரைப்படத்திற்கு நடக்காமல் போனதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றாதை  கண்டார்கள்.

இருந்தாலும் விஜய் சன் தொலைக்காட்சியில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ரார் இந்த நிகழ்ச்சியை நெல்சன் திலீப்குமார் தான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஜய் பற்றியும் பீஸ்ட் திரைப்படத்தை பற்றியும் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டு  அனைவரிடமும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் ஒன்று தான் குட்டி ஸ்டோரி இந்தமுறை விஜய் குட்டி ஸ்டோரி கூறியதாவது முதலில் விஜயிடம் குட்டி ஸ்டோரி நெல்சன் கேட்டபோது ஸ்டாக் எதுவும்  இல்லை என கிண்டல் அடித்தார். பிறகு புல்லாங்குழலையும்  கால் பந்தையும் ஒப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி கூறினார். அதில் அவர் கூறியதாவது புல்லாங்குழலை பார்த்து கால்பந்து கேட்டதாம் உனக்கும் காத்து தான் இருக்கு எனக்கு ளையும் காத்து தான் இருக்கு ஆனால் உன்னை வாயில் வைத்து முத்தமிடுகிறார்கள் என்னை காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்றதாம்.

இதற்கு பதிலளித்த புல்லாங்குழல் உனக்குள் இருக்கும் காற்றை நீ யாருக்கும் தருவதில்லை ஆனால் எனக்குள் இருக்கும் காற்றை இன்னிசை ஆக மாற்றி மக்களுக்கு தருகிறேன் அதனால்தான் என்னை அள்ளி முத்தமிடுகிறார்கள் உன்னை காலில் போட்டு மிதிக்கிறார்கள்  என்று சொன்னதாம். அதனால் கால்பந்தை போலில்லாமல், புல்லாங்குழல் ஆக இருந்து அனைவருக்கும் உதவ வேண்டும் எனக் கூறினார் விஜய்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் குட்டி ஸ்டோரி வேற லெவல் இருப்பதாகவும் புல்லாங்குழல் விஜய் எனவும் கால்பந்து அஜித் எனவும் சமூக வலைத்தளத்தில் போர்க்களத்தை உண்டாக்கி விட்டார்கள்.