பீஸ்ட் ட்ரைலரை வைத்து வீடியோவை வெளியிட்டு சன் டிவியை மகா மட்டமாக கலாய்த்த விஜய் டிவி.! இது எங்கே போய் முடியுமோ.?

விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அது மட்டுமில்லாமல் ஐந்து நிமிடத்தில் ஒரு மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களைக் கடந்தது.  இந்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதளமான டுவிட்டரில் அறிவித்திருந்தது.

மேலும் ட்ரெய்லர் இன்னும் சாதனைகளை படைக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும்  இந்த டிரைலரில் ஒரு மாலில் தீவிரவாதிகள் வந்து விடுகிறார்கள் அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கிறார்கள்.  அந்த மாலில் விஜயும்  இருக்கிறார் அதன் பிறகு தீவிரவாதிகளை எப்படி அடித்து துவம்சம் செய்கிறார் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் டிரைலரில் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சியில் விஜய் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக இரண்டு கதவுகளுக்கு இடையே செல்வார் இந்த காட்சியை ஏற்கனவே கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் வீடியோ உடன் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் இந்த திரைப்படம் யோகி பாபு நடிப்பில் வெளியாகிய கூர்கா திரைப்படத்தின் காப்பி என பலரும் கூறி வருகிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தொலை காட்சிகளுக்கு இடையே போட்டிகள் நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி கூர்கா திரைப்படத்தின் வீடியோவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் சன் டிவி இன்று மாலை ஆறு மணிக்கு பீஸ்ட் ட்ரெய்லரை வெளியிட்டு அதனை கலாய்க்கும் விதமாக இந்த வீடியோ பதிவு போடப் பட்டுள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் டிவி சன் டிவியை கலாய்க்க விதமாக எத்தனை பேருக்குக் கூர்க்கா படத்தை பிடிக்கும் என கேட்டுள்ளார்கள்.

இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளது விஜய் டிவி.