தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது இந்த நிலையில் படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலானது அது மட்டுமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியது.
மேலும் பீஸ்ட் படத்துக்கு போட்டியாக கேஜிஎப் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய நடிகர்களின் திரைப்படம் என்பதால் வசூலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு படக்குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட்திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த போகிறது சன் நிறுவனம். ட்ரெய்லர் எப்படி இருக்கும் எதுபோல் இருக்கும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வரக்கூடிய ட்ரெய்லர்க்காக இப்பவே சமூகவலைதளத்தில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங்கில் கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு நிமிடமும் பீஸ்ட் துடிப்பு ரசிகர்கள் மனதில் துடித்துக்கொண்டே இருக்கிறது.