நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும் ரத்தக்களறியுடன் விஜய் வைரலாகும் பீஸ்ட் அப்டேட்.! நெல்சன் சொன்னத செஞ்சிட்டாரே

beast trailer
beast trailer

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்,  செல்வராகவன் யோகி பாபு, அபர்ணா தாஸ்  ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். மேலும் இந்தத் திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது அதற்கான புரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஏப்ரல் 14ஆம் தேதி யாஷ் நடிப்பில் கேஜிஎப் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த இரண்டு திரைப்படங்களும் மோதிக் கொள்வதால் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கேஜிஎஃப் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கச் செய்தது.

ஆனால் இன்னும் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் அல்லது டீசர் எதுவும் வெளியிடாமல் இருப்பதால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருந்தார்கள் இந்நிலையில் டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும் ட்ரைலர் தேதியை அறிவிக்க ஒரு போஸ்டரையும் வெளியிட்டு உள்ளது படக்குழு  அந்த போஸ்டரில் விஜய் ரத்தக் கறைகள் உடன் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் கேப்ஷனாக நம்ம ஆட்டம் இனிமேல் வேற மாதிரி இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ.