என்ன நெல்சன் இதெல்லாம் அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்கீங்க.? பீஸ்ட் ட்ரைலரை ஆதாரத்துடன் காய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்.!

beast trailer
beast trailer

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் டிரைலரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்தார்கள் அதேபோல் டிரைலரை வெளியிட்டார்கள்.

ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மட்டுமல்லாமல் ஐந்து நிமிடத்தில் சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்  ஏஜெண்டாக நடித்துள்ளார் தீவிரவாதி கும்பல் ஒரு மாலை அவரது கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் அப்பொழுது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கிறார்கள்.

விஜயும் அந்த மாலில் இருக்கிறார். விஜய் மாலில் இருக்கும் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் தீவிரவாதிகளை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை பார்த்த நெட்டிசன் இது அந்த படத்தின் காட்சிகள் என விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்தவகையில் ஒரு ஆக்ஷன் காட்சியில் கதவை கொண்டு துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்புவது போல்  காட்டப்பட்டிருக்கும் இந்த காட்சி இதற்கு முன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் டிரைலரில் இருந்தது. இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் இந்த சீன எங்கேயோ டிஸ்கஸ் பான்னுணப்ப லோகேஷ்  மற்றும் நெல்சன் இரண்டு பேரும் சேர்ந்து இருந்துருப்பாங்க போல.

ஒரே மாதிரியாக எடுத்துருக்காங்க அட்லியியும் கூட இருந்திருந்தால் ஷாருக்கான் படத்தில் பார்க்கலாம் இந்த காட்சியை என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு நெட்டிசன் இந்த திரைப்படம் 100 சதவீதம் கூர்கா 2 தான் என பதிவு செய்துள்ளார்கள். மேலும் ஒரு ரசிகர் பீஸ்ட் என சொல்லிவிட்டு கூர்கா படத்தை எடுத்து இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார்.