beast திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ள சன் பிக்சர் நிறுவனம் இன்று மாலை 6 மணிக்கு ட்ரைலரை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர் இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பீஸ்ட் படத்தில் விஜய் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து மிரட்டியுள்ளார்.
பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு மாலில் ஹைஜாக் நடக்கிறது அப்பொழுது எதேர்ச்சியாக விஜய் அங்கு இருக்கிறார். மக்களைப் பிணைக்கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைக்கிறார்கள் அவர்களை விஜய் எப்படி காப்பாற்றுகிறார் தீவிரவாதிகளை எப்படி கையாளுகிறார் என்பதே பீஸ்ட் ட்ரைலரில் காட்டப்பட்டுள்ளது.
மேலும் தளபதி விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு,அபர்ணா தாஸ் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள் செல்வராகவன் இந்த திரைப்படத்தில் தீவிரவாதிகளுக்கும் கவர்மெண்ட் க்கும் இடையே பஞ்சாயத்து செய்வது போல் நடித்துள்ளார். ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதுமட்டுமில்லாமல் சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த நிலையில் ட்ரெய்லர் வந்த ஐந்து நிமிடத்தில் ஒரு மில்லியன் ரியல் டைம் பார்வையாளர்களை கடந்துள்ளதாக சன் பிக்சர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சாதனையை சன் பிக்சர் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் பீஸ்ட் ட்ரைலர் ஐம்பத்தி ஐந்து நிமிடத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 8.5 லட்சம்லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.