பீஸ்ட் ட்ரைலர்க்கே முன்னோட்டத்தை வெளியிட்டு மாஸ் காட்டிய சன் பிக்சர்ஸ் நிறுவனம்.! தெறிக்க விடும் தளபதி ரசிகர்கள்

beast
beast

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது, இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என நெல்சன் மற்றும் படக்குழு  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தநிலையில் ட்ரைலரை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தில் இருந்து வெளியாகிய அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடம் வைரலாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் அதனை தொடர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகியது  இந்த நிலையில் சன் பிக்சர் நிறுவனம் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளது படக்குழு. வெறும் 17 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் தளபதி விஜயின் காட்சிகள் வெறித்தனமாக இருக்கிறது.

தளபதி விஜய் இந்த காட்சியில் அதிரடி ஆக்சன்களை முடித்துவிட்டு கெத்தாக நடந்து வருவது போல் இருக்கிறது இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார். அதனால் மற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெறும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ