மாஸ்டர் படத்தின் வசூலை கூட நெருங்க முடியாமல் திக்குமுக்காடும் “பீஸ்ட்” – ஆந்திராவில் பெரும் நஷ்டம்.!

vijay
vijay

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன்னுக்கு வாய்ப்பு கொடுத்து தனது 65வது திரைப்படமான பீஸ்ட படத்தில் நடித்தார் இந்தப் படம் மற்ற படங்களை விட பிரம்மாண்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான  முறையில் வெளியானது.

ஆனால் படம் திரையரங்கில் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றதால் நாளுக்கு நாள் இந்த படத்தின் வசூல் குறைந்து கொண்டதோடு போனது.  பீஸ்ட் படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தொடர்ந்து பேசப்பட்டன.தமிழ்நாட்டில் தான் வசூலிக்கவில்லை என்றால் என்ன மற்ற இடங்களிலும் தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அங்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்பாக மலேசியா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற இடங்களில் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம் ஆனால் அங்கேயும் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறாமல் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு ஓடிக்கொண்டிருந்தது இது போதாத நிலையில் கேஜிஎப் திரைப்படம் பீஸ்ட் படத்துடன் போட்டி போட்டது.

KGF 2 வெளிவந்து நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்றதால் பீஸ்ட் படத்திற்கான திரையரங்குகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இதனால் வசூலில் அதலபாதாளத்துக்குச் சென்றது. தமிழில் ஓரளவு தற்பொழுது ஓடிக்கொண்டிருந்தாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மரண அடி வாங்கிய உள்ளது பீஸ்ட்.

விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் சுமார் 14.50 கோடி வசூல் செய்ததை ஆனால் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதை தொடமுடியவில்லை. பீஸ்ட் படம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து வெறும் 7.22 கோடி மட்டுமே அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.