தமிழ் சினிமா உலகில் குறைந்த திரைப்படங்களை இயக்கி டாப் நடிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இவர் இதுவரை கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய படங்களை இயக்கினார் கடைசியாக தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் மாபெரும் படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது. படம் ஓரளவு நன்றாக இருந்த காரணத்தினால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது முதல் நாளில் மட்டுமே உலக அளவில் 70 கோடி வசூல் செய்த நிலையில் அடுத்த அடுத்த நாள் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட..
நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டது ஏனென்றால் பீஸ்ட் படத்தைவிட இந்த படம் சிறப்பாக இருப்பதால் தற்போது ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன இரண்டாவது நாள் வசூல் பீஸ்ட் படத்திற்கு பாதிக்கு பாதி தான் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி ஒரு கவலைக்கிடமான நிலையில் பீஸ்ட் திரைப்படம் இருக்கிறது. இப்படி ஆக காரணம் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் முந்தைய படங்கள் மாதிரி எடுக்காதது என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பீஸ்ட் திரைப்படத்தை பார்த்து உள்ளார்.
படத்தை முழுவதையும் பார்த்து விட்டு சற்று நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்து பின் தான் எழுந்து போனாராம் அதை வைத்து பார்க்கும் போது ரஜினியின் 169 வது திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இனிமேல் நெல்ஷனுக்கு கொடுப்பாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.