முன்பதிவில் மாஸ் காட்டும் “பீஸ்ட்” – ஒரு திரையரங்கில் மட்டும் ஒரு கோடி வசூல்.! எங்கு தெரியுமா.?

நடிகர் விஜயின் பீஸ்ட் படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தை தனக்கே உரிய பாணியில் இளம் இயக்குனர் நெல்சன் எடுத்து உள்ளார். மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன்,  ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்கள் ஒவ்வொன்றும் மிரட்டும் வகையில் இருந்து வந்துள்ளது.

டிரைலரை தொடர்ந்து சமீபத்தில் கூட இந்த படத்தின் 2 வது ட்ரெய்லர் வீடியோ ஒன்று வெளியாகி அதிர வைத்துள்ளன. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஒருவழியாக படம்  நாளை வெளியாக இருக்கிறது. தற்போது முன்பதிவில் பட்டையை கிளப்பி வருகிறது  பீஸ்ட்.

தமிழ்நாட்டையும் தாண்டி வெளிநாடுகளில் அங்கு தீவிரமாக முன்பதிவு நடைபெற்று வருகிறது இதன் மூலம் பல கோடியை அள்ளியது பீஸ்ட். இப்படி இருக்கின்ற நிலையில் முன்பதிவில் மட்டும் ஒரே ஒரு திரையரங்கில் ஒரு கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் ஒன்று புதிதாக கிளம்பியுள்ளது.

பீஸ்ட் திரைப்படம் ரோகினி திரையரங்கில் முன்பு ஒரு நல்ல வேட்டை கண்டு உள்ளது. அந்த ஒரு திரையரங்கில் மட்டுமே ஒரு கோடி வசூலித்ததாக தகவல்கள் உலா வருகின்றன இது டிக்கெட் நியூ புக், மை ஷோ பெற்ற தளங்களின் விவரங்களை வைத்தே இந்த வசூல் நிலவரம் வெளியிட்டுள்ளார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment