தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார் இதற்கு முன் நெல்சன் கோலமாவு கோகிலா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், ரெடிங் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் அந்த வகையில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது நாளை ரிலீசாக இருக்கிறது. உலகம் முழுவதும் ரிலீசாகும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வந்து விட்டதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டார்கள்.
அந்த வகையில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் அணிந்துள்ள ரத்தக்கறை உள்ள உடையை ஆர்டர் செய்து ரசிகர்கள் பலரும் அணிந்தபடி புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். சமூகவலை தளம் முழுவதும் ரத்தக் கறை உள்ள சட்டை பீஸ்ட் திரைப்படத்தின் ஆடை தான் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் இப்படி தான் வரப்போகிறார்கள் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.