சமூக வலைதளத்தை திறந்தாலே பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் தான் வெறித்தனமாக இருந்து வருகிறது. விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்துள்ளார் காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் நடனமாடி வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பீஸ்ட் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியானது இந்த பாடலை விஜய் அவர்கள் பாடியுள்ளார். அதேபோல் அரபிக் குத்து பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து பாடி இருந்தார்கள். இந்த நிலையில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியான ஆரம்பத்தில் அதிக பார்வையாளர்களைக் கடந்தது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பீஸ்ட் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது அதற்கு காரணம் பீஸ்ட் திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாக கூறி வருகிறார்கள் அதில் ஒரு வில்லன் செல்வராகவன் எனவும் மேலும் இரண்டு வில்லன்கள் யார் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. அதேபோல் பீஸ்ட் திரைப்படம் தீவிரவாதி கதை என்பதால் அதற்கு ஏற்றது போல் ஒரு வில்லனை தேர்வு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அவர் வேறு யாரும் கிடையாது ஏற்கனவே தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய மரியான் திரைப்படத்திலும் தனுஷின் மாறன் திரைப் படத்திலும் நடித்தவர் தான் இவர் பெயர் அங்குர் விகல், இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மூன்று வில்லன்கள் எனக் கூறி வந்த நிலையில் ஒரு வில்லன் செல்வராகவன் எனவும் மற்றொரு வில்லன் அங்கூர் விகல் என்பதும் தெரிந்து விட்டது இன்னும் மெயின் வில்லன் யார்என்பது தெரியாமல் இருந்து வருகிறது படம் ரிலீசாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில்.
மெயின் வில்லன் யார் என்பது விரைவில் தெரியவரும்.