beast second single track : தளபதி விஜயின் 65வது திரைப்படமாக உருவாகியுள்ளது பீஸ்ட் திரைப்படம் இந்த திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் தான் இயக்கி உள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் அபர்ணா தாஸ், யோகி பாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பீஸ்ட் திரைப்படத்திலிருந்து மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
அதுமட்டுமில்லாமல் படத்தின் நூறாவது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும். இறுதி நாள் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து அப்டேட் காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி அரபிகுத்து முதல் சிங்கிள் ட்ராக்கை படக்குழு வெளியிட்டது.
இந்த அடுத்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார் முதல் சிங்கிள் டிராக் வெளியானபோது அனிருத், நெல்சன், சிவகார்த்திகேயன், ஆகியோர்கள் இடம் பெற்று இருந்தது போலவும் போனில் விஜய் பேசியது போலவும் இருந்தது. ஹலமதி ஹபிபோ எனத்தொடங்கும் அரபி குத்து பாடலை அனிருத் மற்றும் ஜோனிட காந்தி இணைந்து பாடிய வந்தார்கள் இந்த பாடல் யூடியூபில் 182 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்திலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது அதாவது பீஸ்ட் திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடல் வருகின்ற 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார் என்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில் இந்தத் படத்தின் ப்ரோமோ வீடியோவை படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது இந்த பாடல் ப்ரோமோ வீடியோவில் விஜய் நெல்சன் அணிருத் பூஜா ஹெக்டே ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளதாக காட்சிகள் வெளியாகி உள்ளது.