பீஸ்ட் ரிலீஸ் தேதியை சென்சாருடன் அறிவித்த படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்

beast

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் யோகிபாபு செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் விடிவி கணேஷ், கவின், மலையாள நடிகை அபர்ணா தாஸ், அங்கூர், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து காதலர் தினத்தில் அரபி குத்து பாடல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட வைத்தது. சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டார்கள். தொடர்ந்து சமீபத்தில் ஜாலியோ ஜிம்கானா என்ற செகண்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது.

இந்தநிலையில் பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியானது இந்நிலையில் தற்பொழுது ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறது படக்குழு. மேலும் பீஸ்ட் படத்திற்கு  தணிக்கை குழு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு தற்பொழுது வெளியீட்டு படத்தின் ரிலீஸ் தேதியும் உறுதிசெய்துள்ளது இந்த தகவல் ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வருகிறது.