அண்மைகாலமாக டாப் நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கின்றனர் அந்த வகையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியவர்கள் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளித் தருவதால் இளம் இயக்குனர் முன்னேறுகின்றனர். குறிப்பாக தளபதி விஜய் இளம் இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை அள்ளி வீசுகிறார்.
அந்த வகையில் அட்லீ, லோகேஷ் கனகராஜ் ஆகியோர்களைத் தொடர்ந்து நெல்சன் உடன் கை கோர்த்தது தனது 65 வது திரைப்படமான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் இந்த படம் ஒரு வழியாக ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகியது. ஆனால் நெல்சனின் முந்தைய படங்கள் போல இந்த படமும் இல்லாமல் போனது.
ஏன் என்றால் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்கள் நல்ல கருத்துகளை எடுத்து சொன்னாலும் அதில் காமெடிகள் நிறைய இருந்ததால் படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் வேட்டை நடத்தியது ஆனால் பீஸ்ட் படமும் அந்த தவறை செய்தது ஏனென்றால் லாஜிக் மீறல், பெரிய அளவில் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை விஜய்யின் நடிப்பு மட்டுமே சிறப்பாக இருந்ததால் ஓரளவு வசூலை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் விஜய்யை வைத்து இப்படி ஒரு படத்தை எடுத்துள்ளாயே என கூறி நெல்சன் விமர்சிக்கின்றனர் இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் இதற்கு பதில் அளித்துள்ளார். நாம் ஒன்று எதிர்பார்த்து எடுக்கும் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று செய்தோம்.
ஆனால் அது நடக்கவில்லை. அடுத்த படத்தை அனைவருக்கும் பிடித்தபடி எடுப்போம் என ஸ்டண்ட் மாஸ்டரிடம் நெல்சன் கூறியதாக தெரியவருகிறது. சினிமாவுலகில் ஏற்றத்தாழ்வுகள் வருவது சகஜம் அதிலிருந்து பாசிட்டிவான முடிவு எடுத்து ஓடினாலே வெற்றியை ருசிக்கல்லாம் அதற்கு நெல்சன் சொன்ன வார்த்தைகள் சரிதான் என கூறி ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக நின்று வருகின்றனர்.