தளபதி விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது இந்த நிலையில் பல நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை அதிகாலை காட்சியில் பார்த்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை அனிருத், நெல்சன் திலீப் குமார், பூஜா ஹெக்டே ஆகியோரும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு களித்தார்கள்.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு அபர்ணா தாஸ் ஆகியோர்களும் தங்களது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
பொதுவாக ஒரு திரைப்படம் எப்படி வந்துள்ளது என்பதை பொதுமக்கள் கருத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்திற்கும் பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து இதோ.