மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இதற்கு முன் விஜயின் சர்க்கார் திரைப்படத்தையும் சன் பிக்சர் நிறுவனம் தான் தயாரித்தது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே செல்வராகவன் யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் இருக்கின்ற வேளையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு முன்புறமாக செயல்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் படத்திற்கான முன்பதிவு பூக்கிங் அனைத்தும் விறுவிறுப்பாக விற்று தீர்த்து வருகிறது. ஒரு சில ஏரியாக்களில் ஹவுஸ்ஃபுல் என்ற நிலைமை நீடித்து வருகிறது.
இந்த நிலையில் இதுவரை விற்றுத் தீர்த்த டிக்கெட்களை வைத்து கலெக்ஷனை கணித்து வருகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் அந்தவகையில் இதுவரை வெளியான அனைத்து திரைப்படத்தின் சாதனைகளையும் பீஸ்ட் முறியடிக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் அதனால் படக்குழு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் சன் தொலைக்காட்சி பீஸ்ட் திரைப்படத்திலிருந்து புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது அரபிக் குத்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் விஜயின் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இதோ அந்த வீடியோ