படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த “பீஸ்ட்” படக்குழு – கடைசி நாளை முன்னிட்டு பூஜா ஹெக்டே சொன்ன விசேஷ தகவல்.

pooja-hegde
pooja-hegde

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது சிறந்த இயக்குனர் என்ற பெயரை அண்மையில் பெற்ற நெல்சன் திலீப்குமார் உடன்  கைகோர்த்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வந்தார் இந்த படத்தின் படப்பிடிப்பு 75% தான் முடிவடைந்தது என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையில் இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளிவருகின்றன இந்த படத்தில் விஜயுடன் கைகோர்த்து செல்வராகவன்,  பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விவிடி கணேஷ் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தை வேறு ஒரு தளத்தில் நெல்சன் திலிப்குமார் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் திரைப்படம் ஷூட்டிங் ஆரம்பத்தில் இருந்து  தற்போது வரையிலும் பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து அசத்தியவர்  நடிகை பூஜா ஹெக்டே. ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மறைமுகமாக பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தள பக்கத்தில் கசிந்தன. இது போதாத குறைக்கு  படக்குழுவே அவவ்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியது.

இதனால் மக்கள் ரசிகர்கள் விஜய்யின் படத்தை வேற லெவல் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் படம் அடுத்த வருடம் கோடை மாதங்களில் தான் வெளிவரும் என கூறப்படுகிறது ஏனென்றால் படத்தின் சூட்டிங் முடிந்தாலும் போஸ்ட் புரமோஷன் வேலைகள் இழுக்கும் என தெரியவந்துள்ளது.

இது இப்படியிருக்க கடைசி நாள் ஷூட்டிங் முடிந்ததையடுத்து இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே படத்தில் நடித்த பொழுது எப்படி இருந்தது குறித்தும் விஜய் மற்றும் நெல்சன் திலீப்லிப்குமார் குறித்தும் அவர் பேசிய வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.