beast movie villan selection: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக போற்றப்படுபவர் தான் தளபதி விஜய் இவர் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய 65வது திரைப்படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு தளபதி நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தினை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
இந்த இயக்குனர் ஏற்கனவே கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டாக்டர் என்ற திரைப்படத்தை கூட இவர்தான் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் தளபதியை வைத்து பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு வெளிவந்த நமது தளபதி திரைப்படம் வெளிவந்தாலே போதும் பல்வேறு தரப்பினருக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் படி இருக்கும் அந்த வகையில் இந்த திரைப்படத்தை தளபதியின் டைட்டிலை பார்த்து பிரபல அரசியல் கட்சியில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதாவது தளபதி விஜய் எப்போதும் ஆங்கிலப்பெயர் உள்ள டைட்டிலையே தன்னுடைய திரைப் படத்திற்கு தலைப்பாக வைக்கிறார் அந்த வகைகள் தளபதி விஜய் லவ் டுடே ஒன்ஸ்மோர் பிரண்ட்ஸ் யூத் மாஸ்டர் போன்ற பல்வேறு திரைப்பட தலைப்புகளும் ஆங்கில தலைப்பாக தான் அமைந்து வருகிறது.
முதல் நாளாக இந்த திரைப்படத்தின் டைட்டில் டார்கெட் என கூறப்பட்டது ஆனால் அதன்பிறகு நான் இந்த திரைப்படத்தின் டைட்டில் பீஸ்ட் என தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் தான் இசையமைக்க உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 5 மெகா ஹிட் வில்லன்களை பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் அருண் விஜய், செல்வராகவன், ஜான், துப்பாக்கி பட வில்லன் போன்றவர்களில் யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.